×

முத்துப்பேட்டையில் சதுரங்கபோட்டியில் மாணவிகள் பங்கேற்பு

 

முத்துப்பேட்டை, ஜூலை 6: முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி கோயில் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது, இப்போட்டியினை பள்ளி தலைமையாசிரியை வனிதா துவங்கி வைத்தார், இதில் போட்டிகள் 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு, 9 மற்றும் 10- ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு, என தனித்தனியாக நடைபெற்றது. நிறைவாக வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இதில் பள்ளி அளவில் முதல் இரண்டு இடங்களைப்பெற்ற மாணவிகள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டதாக பள்ளி தலைமையாசிரியை வனிதா கூறினார்.

 

The post முத்துப்பேட்டையில் சதுரங்கபோட்டியில் மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Muthupettai ,Kovilur Girls' Higher Secondary School ,Kovilur Arulmigu Periyanayaki Temple Girls' Government Higher Secondary School ,Muthupettai, Thiruvarur ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...