- முதல் அமைச்சர்
- திருப்பூர்
- நகராட்சி கழகம்
- மேயர்
- தினேஷ் குமார்
- மு.கே ஸ்டாலின்
- திருப்பூர் வடக்கு
- மாநகர செயலாளர்
- மாநகர
- மாநகராட்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
திருப்பூர், மார்ச்1:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். திருப்பூர் வடக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 71-வது பிறந்தநாள் விழாவை திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து மார்ச் மாதம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம் நடத்த வேண்டும்.
கண் தானம் செய்தும், முதியோர்,ஆதரவற்றோர் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கியும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கியும் சிறப்பாகவும், எழுச்சியோடும் கொண்டாட வேண்டும். விழாக்களில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி,கிளை நிர்வாகிகள், முன்னாள்,இன்னாள் எம்.எல்.ஏ.க்கள்,மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
The post முதல்-அமைச்சர் பிறந்தநாளை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் appeared first on Dinakaran.