×

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சிந்தனைகள் செயலாகி சாதனையாகிறது: முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பேச்சு

காரைக்குடி, ஜூன் 3: காரைக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழிகாட்டுதலின்படி கோடை காலத்தை முன்னிட்டு திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் நீர், மோர் பந்தல் துவங்கப்பட்டு 50ம் நாள் விழா நடந்தது. மாவட்ட கலை இலக்கிய பேரவை துணைத்தலைவர் காரை சுரேஷ் வரவேற்றார். மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை தலைமை வகித்தார். மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் பொறியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

விழாவை துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பேசுகையில், ஒருபொழுதும் ஓய்வு இல்லை, ஒரு சொல்லும் வீண்இல்லை என சொல்லத்தக்க வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓயாது உழைத்து வருகிறார். மொழி, இனம், பண்பாடு, கலாச்சாரம், நாகரீகத்தை வெளிக்கொண்டு வந்து உலகரிய செய்து வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்கு ஆண்டுகளில் சாதித்த சாதனைகள் ஏராளம். வரலாற்று சாதனை படைத்தவர் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது. நமது முதல்வர் ஆட்சியில் சிந்தனைகள் செயல்கள் ஆகிறது. செயல்கள் சாதனையாகிறது. சாதனைகள் சரித்திரமாகிறது. முதல்வரின் ஆட்சி தமிழ்நாட்டின் பெற்காலமாக உள்ளது.

முத்தமிழ் அறிஞர் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவர் வழியில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். கலைஞர் எத்தகைய முன்னோடி திட்டங்களை தந்தாரோ அதுபோலவே தமிழ்நாட்டின் வளர்ச்சி, மேம்பாட்டுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி ஒப்பில்லா முதல்வராக நம் தலைவர் உள்ளார். மக்கள் நலனை முழுமையாக பூர்த்தி செய்யும் தலைவராக முதல்வர் உள்ளார் என்றார். இதில் நகர அவைத்தலைவர் சன் சுப்பையா, மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், துரைநாகராஜன், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் முனீஸ்வரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் புதுவயல் சுப்பிரமணி உள்படபலர் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சிந்தனைகள் செயலாகி சாதனையாகிறது: முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Former Minister ,M. Tennavan ,Karaikudi ,Cooperatives Minister ,KR. Periyakaruppan ,DMK Arts, Literature and Rationale Forum ,DMK Arts and Literature Rationale Forum ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...