×

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

 

முசிறி, மே 24: திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2020-21ம் ஆண்டுதேர்வு பெற்ற மாணவ மாணவிகளுக்கு 36 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முனைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து விழா பேருரையாற்றினார். தொடர்ந்து எம்பில் படித்த ஒரு மாணவிக்கும், முதுகலை படித்த 163 மாணவ மாணவிகளுக்கும், இளங்கலை பட்டப்படிப்பு முடித்த 575, மாணவ, மாணவிகள் உள்பட 739 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
கல்லூரியின் முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். முதுகலை பட்டபடிப்பில் 9 மாணவிகள் பல்கலைக்கழக அளவில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளனர். பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Ceremony ,Musiri Scholar Anna Government College of Arts ,Musiri ,36th Graduation Ceremony ,2020-21 Annual Examination ,Musiri Scholar Anna Government Art College ,Trichy District ,Trichi Bharatithasan University Governing Council Committee ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்