×

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கி பலி

தர்மபுரி, ஜூன் 17: கடத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் முனுசாமி(42). கூலித்தொழிலாளியான இவர், கடந்த சனிக்கிழமை மீன் பிடிப்பதற்காக அங்குள்ள ஏரிக்கு சென்றார். அப்போது, அவர் போதையில் இருந்ததால், அவரது மனைவி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால், அதனை மீறி மீன்பிடிக்க சென்ற முனுசாமி, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் ஏரிக்கு சென்று பார்த்த போது, கரையில் அவரது பேன்ட், டீசர்ட், செருப்பு உள்ளிட்டவை கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், கடத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் இறங்கி தேடி, முனுசாமியின் உடலை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Munusamy ,Indira Nagar ,Kadtur ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...