×

மீனாட்சியம்மன் கோயில், உபகோயில்கள் உண்டியல் வசூல் ரூ.1.02 கோடி

 

 

மதுரை, ஜூன் 27: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை கமிஷனர், செயல் அலுவலர் கிருஷ்ணன் முன்னிலையில் நேற்று மீனாட்சி கோயில் மற்றும் 11 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின்போது கோயில் அறங்காவலர்குழுத் தலைவரின் பிரதிநிதி, அறங்காவலர்கள், கள்ளழகர் கோயில் துணை கமிஷனர், கண்காணிப்பாளர்கள், மதுரை வடக்கு, தெற்கு சரக ஆய்வாளர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர். உண்டியல் திறப்பின்போது ரொக்கம் ரூ.1,02,79,831, தங்கம் 344 கிராம், வெள்ளி 689 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுகள் 747 எண்ணிக்கையில் கிடைத்தன.

The post மீனாட்சியம்மன் கோயில், உபகோயில்கள் உண்டியல் வசூல் ரூ.1.02 கோடி appeared first on Dinakaran.

Tags : Meenakshi Amman Temple ,Madurai ,Madurai Meenakshi Sundareswarar Temple ,Joint Commissioner ,Executive Officer ,Krishnan ,Sub-Temples ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...