×

மா.கம்யூ. கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

புதுக்கோட்டை, ஜூன் 18: ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தியும், பொதுமக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியத்தில் மக்கள் சந்திப்புப் பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. கீரமங்கலத்தில் துவங்கிய பிரச்சார இயக்கத்திற்கு ஒன்றிய செயலாளர் குமாரவேல் தலைமை வகித்தார். பிரச்சாரத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிவர்மன் தொடங்கி வைத்து உரையாற்றினார். பல்வேறு ஊர்களில் நடைபெற்ற பிரச்சாரம் மாலையில் கொத்தமங்கலத்தில் நிறைவடைந்தது.

The post மா.கம்யூ. கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : Ma.Communist. Party ,Pudukottai ,Thiruvarangulam East Union ,Marxist Communist Party ,Union government ,Keeramangalam… ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்