×

மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிகள் வேளாண் துறையினர் தகவல்

மதுரை, மே 29: மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் பூச்சியியல் துறையினர் தகவல்களை வழங்கியுள்ளனர். இது குறித்து வேளாண் பூச்சியியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: காய்கறி மற்றும் பழப்பயிர்கள் உற்பத்தியில் பெரும் சவாலாக இருப்பது பூச்சி மற்றும் நோய் தாக்குதலாகும். சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், அசுவினி தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் வெள்ளை ஈ போன்றவை, பயிர்களை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதில் மாவுப்பூச்சி அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் இப்பயிர்களின் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. பல்ேவறு காலநிலை மாற்றங்களால் மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகரித்துள்ளது.

இதனால் பயிர்கள் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாக மாறி பின் செடிகள் வாடும். இந்த மாவுப்பூச்சி ஒரு செடியில் இருந்து மற்ற செடிகளுக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டவை. இவற்றை அழிக்க மிகவும் பாதிக்கப்பட்ட செடிகளைப் பறித்து எடுத்து தீயில் எரித்து அழிக்க வேண்டும். குறைந்த அளவு பாதிப்புள்ள பயிர்களை பாதுகாக்க மூன்று சதவிகிதம் 25 மில்லி வேப்ப எண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இத்துடன் மெட்டாரைசியம் அல்லது பெவேரியா பேசியானா 5 கிராம் 1 லிட்டர் தண்ணீர் கலந்தும் தெளிக்கலாம். பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும் நேரங்களில், புரோபெனோபாஸ் 2 மில்லி என்ற அளவினை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இதேபோல் தையோமீ தாக் சாம் 0.5 மில்லி மற்றும் ஒட்டும் திரவம் 0.5 மில்லி ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிகள் வேளாண் துறையினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,agricultural entomology department ,department ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...