×

மாவட்டம் முழுவதும் 99 மிமீ மழை பதிவு

 

கரூர், ஆக. 21: தென்மேற்கு பருவமழை காரணமாக கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு 99 மிமீ மழை பெய்தது.ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலமாகும். இந்த காலக்கட்டத்தில் பெய்யும் மழை ஆண்டின் சராசரி மழையளவை எட்ட உதவி வருகிறது. கரூர் மாவட்டத்திலும் இந்த சீசனில் ஆண்டுதோறும் அதிகளவு மழை பெய்து வந்தது.

ஆனால, கடந்த இர ண்டு மாதங்களாக குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்லை. மழைக்கு பதிலாக ஆகஸ்ட் மாதத்தில் மே மாதத்தை போல சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதக்கியது. இதன் காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடும் அவதியை சந்தித்து வந்தனர்.இந்நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் இரவு நேரத்தில் கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் கரூர் 1.60, அணைப்பாளையம் 2 மிமீ, குளித்தலை 18.40 மிமீ, தோகைமலை 20 மிமீ, மாயனூர் 1 மிமீ, பஞ்சப்பட்டி 30 மிமீ, கடவூர் 21 மிமீ, பாலவிடுதி 5 மிமீ, என மாவட்டம் முழுவதும் 99 மிமீ மழை பெய்திருந்தது. இதன் மொத்த சராசரி 8.25 ஆக உள்ளது.இரண்டு மாதங்களுககு பிறகு கரூர் மாவட்டம் முழுவதும் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்து கரூரை குளிர்வித்து வருவதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post மாவட்டம் முழுவதும் 99 மிமீ மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மிலாடி நபி டாஸ்மாக் கடை மூடல்