×

மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் தாராள புழக்கம்

 

சிவகங்கை, மே 5: சிவகங்கை மாவட்டத்திலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நகரங்களில் உள்ள நிறுவனங்கள், கடைகள் ஆகிய இடங்களில் பரிசோதனை செய்து அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல் வாரச்சந்தை, தினசரி சந்தைகளில் காய்கறிகள், பொருட்கள் வழங்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் ஒரு வாரம் மட்டும் மாவட்டம் முழுவதும் சுமார் 5 டன் அளவிலான பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், நீர் குடிக்கும் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்நிலையில் அதன் பிறகு பறிமுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் வழக்கம்போல் பயன்பாட்டில் உள்ளன. பெரிய வர்த்தக நிறுவனங்களில் மட்டும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யவில்லை.

இவைகள் தவிர கடைகள், சந்தைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.டீக்கடைகளில் சில நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்த பேப்பர் கப்புகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. டாஸ்மாக் பார்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகளும் சில நாட்கள் மட்டும் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் புழக்கத்தில் வந்துள்ளன. இந்த பொருட்களை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் தாராள புழக்கம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivaganga district ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...