×

மார்த்தாண்டத்தில் கடையில் புகையிலை விற்றவர் கைது

 

மார்த்தாண்டம், மே 29: மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீசார் பயணம் குஞ்சுவீட்டுவிளை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 2 பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1,500 ஆகும். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர் செல்வராஜ் (56) என்பவரை கைது செய்தனர்.

The post மார்த்தாண்டத்தில் கடையில் புகையிலை விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : MARTHANDAM ,MARTHAM POLICE ,TOBACCO ,-Inspector ,Vikundadas ,Chichuvila ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...