×

மானாமதுரை அரசு கலைக்கல்லூரியில் நாளை மறுநாள் 3ம் கட்ட கவுன்சலிங்

மானாமதுரை, ஜூன் 14: மானாமதுரை அரசு கல்லுாரியில் மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நாளை மறுநாள் (ஜூன் 16) நடைபெறுகிறது. மானாமதுரை அருகே செய்களத்துாரில் அரசு கல்லுாரி இந்தாண்டு துவக்கப்பட்டுள்ளது. பி.காம்., பி.ஏ., அரசியல் அறிவியல், வரலாறு, பொருளியல், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது. முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் கோவிந்தன் கூறியதாவது: மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நாளை மறுநாள் காலை 9:00 மணிக்கு கல்லுாரியில் நடைபெறும். விண்ணப்பித்துள்ள மாணவர்களின் மதிப்பெண், தகுதி, ஒதுக்கீடு அடிப்படையில் மூன்றாம் கட்ட கவுன்சலிங் நடைபெறும். இதில் பங்கேற்கும் மாணவர்கள் விண்ணப்ப படிவ நகல், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண், மாற்று, ஜாதி, சிறப்பு ஒதுக்கீடு சான்றுகள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றுகளுடன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம், என்றார்.

The post மானாமதுரை அரசு கலைக்கல்லூரியில் நாளை மறுநாள் 3ம் கட்ட கவுன்சலிங் appeared first on Dinakaran.

Tags : Manamadurai Government College of Arts ,Manamadurai ,Manamadurai Government College ,Government College ,Chaitulathur ,. B. Com. ,P. A. ,Political Science, History, Economics, P. SC ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...