×

மாநகராட்சியில் 51 பேர் பணியிட மாற்றம்

 

மதுரை: மதுரை மாநகராட்சியில் பணிகளை வேகப்படுத்தும் வகையில் பொறியாளர்கள் உள்ளிட்ட 51 பேருக்கு கூடுதல் பொறுப்புகளுடன், பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி குடிநீர் விநியோகம் முதல் பாதாளச்சாக்கடை, கழிவுநீரேற்று நிலையம், சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்கு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை குடிநீர் பிரிவு அதிகாரிகளே கவனிக்கின்றனர். இதனால் இப்பிரிவின் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் அதிகாரிகள் உள்ளிட்ட 51 பேருக்கு பணியிட மாறுதல், கூடுதல் பொறுப்புகள் அளித்து கமிஷனர் சித்ரா விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

The post மாநகராட்சியில் 51 பேர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Municipality ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...