×

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்தி வைப்பு

சென்னை: மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே போல் சென்னை பல்கலைக்கழகம் , அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதைத்தொடர்ந்து இன்றிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் புயலின் பாதிப்புகள் நாளை இருக்கும் என்பதால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(10-12-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வந்தன. ஏற்கனவே இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெற உள்ள தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கபட்ட தேர்வுக்கான அட்டவணை புயல் பாதிப்பிற்கு பின்னர் எப்பொழுது தேர்வு நடைபெறும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிவிக்கப்படும் எனவும் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது….

The post மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Cyclone Mandus ,Chennai ,Cyclone ,Dinakaran ,
× RELATED பாஜவுடன் கூட்டணி வைக்கவே அதிமுக...