அரியலூர்: அரியலூர் மாவட்டம், காட்டுபிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அரியலூர் மின்நகரை சேர்ந்த ராஜேஸ்வரி(53) தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் உடையார்பாளையம் அருகே உள்ள பிலிச்சிகுழி கிராமத்தை சேர்ந்த அருள்செல்வன்(33) தமிழ் ஆசிரியராக உள்ளார். நேற்றுமுன்தினம் இப்பள்ளி 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மாணவிகளுக்கு அருள்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கிராம மக்கள், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தமிழ் ஆசிரியர் அருள்செல்வனை கைது செய்தனர். மேலும், பெற்றோரிடம் புகார் கொடுத்த மாணவிகளை தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியையும் போலீசார் கைது செய்தனர். …
The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது: தலைமையாசிரியரும் சிக்கினார் appeared first on Dinakaran.