×

மாணவர்கள் பயன்பெற கியான் போஸ்ட் திட்டம் அறிமுகம்

 

மதுரை, மே 3: இந்திய அஞ்சல் துறையில் சார்பில் ‘கியான்போஸ்ட்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதன்மூலம் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டி தேர்வுக்கு தயாராவதற்கான புத்தகங்களை குறைந்த கட்டணத்தில் அஞ்சல்துறை அலுவலகம் மூலம் அனுப்பலாம்.

அனுப்பபடும் புத்தகங்களின் எடை 300 கிராம் முதல் 5 கிலோ வரை இருக்கலாம். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி, அதிகபட்சமாக ரூ.100 மற்றும் ஜிஎஸ்டியாக கட்டணம் வசூலிக்கப்படும். இதை இணையதளத்தில் டிராக் செய்து கொள்ளலாம்.

The post மாணவர்கள் பயன்பெற கியான் போஸ்ட் திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Indian Postal Department ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...