×

மாகா சக்தி மாரியம்மன் கோயிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு

ஜெயங்கொண்டம். ஏப்.13: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகரில் அமைந்துள்ள மகாசக்தி மாரியம்மன் கோயில் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். இந்நிலையில் கதவின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா சுவிட்சை ஆப் செய்த கொள்ளையர்கள் சாமி கழுத்தில் அணிந்திருந்த இரண்டே முக்கால் பவுன் நகை மற்றும் 2 உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post மாகா சக்தி மாரியம்மன் கோயிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Maha Shakti Mariamman temple ,Jayangondam ,Mariamman temple ,Jayangkondam Velayuthanagar, Ariyalur district ,
× RELATED ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயிலில் மாணவர்கள் உழவாரப்பணி