×

பிச்சனூர் கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அக்.1: ஜெயங்கொண்டம் அருகே பிச்சானூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் புதிய ஆழ்குழாய் அமைக்ககோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிச்சனூர் கிராமத்தில் கீழத்தெருவில் சுமார் 50 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் 7 மாதங்களாக குடி தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதற்கு காரணம் கிணற்றில் நீர் மட்டம் அடியில் சென்றதால் தண்ணீர் எடுக்க முடியாமல் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

இது குறித்து போதிய நிதி இல்லாத காரணத்தால் ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறி தனியார் மூலமாக ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீர் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதேநிலை நீடித்து வந்தால் தனியார் தண்ணீர் தராவிட்டால் பொதுமக்களுக்கு தண்ணீர் இன்றி மிகவும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மோட்டார் பழுது அடைந்து சரி செய்யவில்லை என தெரிய வருகிறது. இதனால் குடிதண்ணீர் எடுப்பதற்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

உடனடியாக எங்களுடைய அடிப்படை தேவையான குடிதண்ணீர் வழங்குவதற்கு புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செந்தில்குமார், ஊராட்சி எழுத்தர் மணிமாறன் உள்ளிட்டோர் விரைவில் உரிய நடவடிக்கை செய்து தருவதாகவும் இன்று மாவட்ட நிர்வாகத்திற்கு சென்று தங்களது குறைகளை எடுத்துக் கூறி நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் உறுதியளித்ததின் அடிப்படையில் பொதுமக்கள் கலந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பிச்சனூர் கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க கோரி காலி குடங்களுடன் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Bichanur village ,Jeyangondam ,Jeyangondam, Ariyalur district ,Bichanur ,Dinakaran ,
× RELATED பள்ளி அருகில் கஞ்சா பொட்டலத்துடன் நின்ற இருவர் கைது