திருவில்லிபுத்தூர், அக்.11: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேற்று ஆய்வு செய்தார். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக கலெக்டர் ஜெயசீலன் நேற்று வருகை தந்தார். அவரை மல்லி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் வரவேற்றார்.
திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மல்லி ஊராட்சி பழைய பட்டி கிராமத்தில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளையும், மல்லி ஊராட்சி உள்ளூர்பட்டி காலனி கிராமத்தில் 15வது நிதி குழு மானியம் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் மற்றும் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற 3 மீட்டர் பாலம் ஆகிய பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
உடன் திட்ட இயக்குனர் தண்டபாணி, திருவில்லிபுத்தூர் யூனியன் ஆணையாளர் சத்திய சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மற்றும் உதவி பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருந்தனர்.
The post மல்லி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.