வந்தவாசி, ஜூன் 20: வந்தவாசி அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் அப்துல் ரஹீம் மர வியாபாரி. இவரது வீட்டில் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த அனைவருக்கும் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலை அலுவலர் பிரபாகரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தி பாம்பை பிடித்தனர். அப்போது பாம்பு படம் எடுத்ததால் நல்ல பாம்பு என தெரியவந்தது. பிடிபட்ட பாம்பை பத்திரமாக சாக்கு பையில் அடைத்து காட்டில் விட்டனர்.
The post மர வியாபாரி வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு appeared first on Dinakaran.
