- மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு
- தஞ்சாவூர்
- அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு
- தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி
- தஞ்சாவூர் மாவட்டம்
- ஜனாதிபதி
- அகிலன்
- ஒருங்கிணைப்பாளர்
- ராஜேஷ்ராம்
- பாலா முரளி
- தின மலர்
தஞ்சாவூர், ஜூன் 19: தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் அகிலன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்ராம், செயலாளர் பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அரசாணை 354-ஐ மறுவரையறை செய்து 14 வருடங்களில் ஊதிய பட்டை 4-ஐ வழங்க வேண்டும், ஆரம்ப சுகாதார மருத்துவ நிலைய மருத்துவர்களுக்கு படித்தொகை ரூ.3 ஆயிரமாக வழங்க வேண்டும். அரசாணை 4 (டி) மூலம் 1000 காலி இடங்கள் காலாவதியானதை திரும்ப பெற்று மீண்டும் அந்தக் காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.
The post மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
