×

மயிலாடுதுறை மாவட்டத்தில் பால்புரஷ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை, ஜூன் 6: ஒன்றிய அரசின் பால் புரஷ்கார் விருது பெற தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். கலெக்டர் அலுவலகம் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. தன்னலமற்ற, துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட, திறமையான குழந்தைகளின் திறமைகளை பாராட்டி அங்கீகாரம் அளிப்பதனை நோக்கமாக கொண்டு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் விளையாட்டு, சமூகசேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கும் இந்த விருது அளிக்கப்படுகிறது.

இந்த விருதினை பெறுவதற்கு இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிக்கும் 5 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். விருது தொடர்பான விண்ணப்பத்தை https://awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவ்விருதுக்கான விண்ணப்பத்தினை குழந்தையோ அல்லது குழந்தையை சார்ந்த பெற்றோர், ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பரிந்துரைக்கலாம். 2025ம் ஆண்டு இவ்விருதுக்கான விண்ணப்பத்தினை 31.07.2025க்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் காந்த் தெரிவித்துள்ளார்.

The post மயிலாடுதுறை மாவட்டத்தில் பால்புரஷ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Collector's Office ,Ministry of Women and Child Development, Government of India ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...