×

மயிலாடுதுறையில் பாஜக சார்பில் மாதிரி பாராளுமன்றம் நிகழ்ச்சி

 

மயிலாடுதுறை, ஜூன் 30: மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி நடத்திய மாதிரி பாராளுமன்றம் நிகழ்ச்சியில் மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாதிரி பாராளுமன்றம் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்றம் நடப்பது போலவும், அதில் கருப்பு முருகானந்தம் சபாநாயகர் போலவும், பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு பிரதமர் போலவும், ஒரு பக்கம் அமைச்சர்கள், ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து உள்ளது போலவும், எதிரில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்து உள்ளது போலவும் மாதிரி பாராளுமன்றம் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியினர் கேள்விகளுக்கு ஆளுங்கட்சியினர் பதில் கூறுவது போல் நடைபெற்றது. பாஜக நகர தலைவர் வினோத் நன்றி கூறினார்.

The post மயிலாடுதுறையில் பாஜக சார்பில் மாதிரி பாராளுமன்றம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Model Parliament ,BJP ,Mayiladuthurai ,State General Secretary ,Karuppur Muruganandam ,Bharatiya Janata Party ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...