×

மயங்கி விழுந்த பெண் பக்தர்

அண்ணாமலையார் கோயிலில் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தொடர்ச்சியாக நின்றபடி செல்லும் நிலை இருந்தது. மேலும் தரிசன வரிசையில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பல இடங்களில் தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், தரிசன வரிசையில் காத்திருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர், மருத்துவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சித்திர குப்தனுக்கு சிறப்பு பூஜை

உமையாள் தீட்டிய சித்திரத்தின் மீது சிவபெருமானின் மூச்சுச்காற்று படர்ந்ததால், சித்திர குப்தர் உருவானதாகவும், அவ்வாறு சித்திர குப்தன் உருவான தினமே சித்ரா பவுர்ணமி எனவும் கூறப்படுகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் உண்ணாமுலையம்மன் அம்மன் சன்னதி எதிரில், நவகிரக சன்னதி அடுத்து அமைந்துள்ள சித்திர குப்தர் சன்னதியில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
குழந்தைகளை கண்டறிய கைகளில் ‘பேண்ட்’

கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை உடனுக்குடன் அடையாளம் கண்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வசதியாக குழந்தைகளின் கையில் பெற்றோர் செல்போன் எண் குறிப்பிட்டு ‘பேண்ட்’ அணிவிக்கப்பட்டது. அதேபோல், குழந்தைகளை காண்பித்து பிச்சை எடுத்த பெண்களை கிரிவலப்பாதையில் இருந்து எச்சரித்து அனுப்பினர். திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் சீருடை அணியாமல் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

The post மயங்கி விழுந்த பெண் பக்தர் appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar temple ,Andhra Pradesh ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...