×

மத் ஆண்டவன் கலைக்கல்லூரி நிறுவனர் பிறந்தநாள் விழா

 

திருச்சி, மே31: மத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனர் மதே  ரெங்க ராமானுஜ மஹாதேசிகன் சுவாமிகளின் 91வது ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை மத் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்வில் ரங்கம் மத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் வடிவ வலைதள வடிவமைப்பை மத் ஆண்டவன் மதே  வராஹ மஹாதேசிகன் துவக்கி வைத்து அருளாசிகள் வழங்கினார். கல்லூரி செயலர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

The post மத் ஆண்டவன் கலைக்கல்லூரி நிறுவனர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Madh Andavan College of Arts ,Trichchi ,Sciences ,Madhe Rengha Ramanuja Mahadesiken Swamis ,Madh Andavan Ashram ,Chennai ,Rangam Math ,Math ,Andavan College ,of Arts Founder ,Birthday Ceremony ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்