×

மத்திய பல்கலைக் கழகங்களில் சமூகநீதி, இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்றி வேலைவாய்ப்பு வேண்டும்: மதிமுக தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: மதிமுக மாணவர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், நேற்று மதிமுக தலைமையகமான தாயகத்தில் நடந்தது. மாணவர் அணி செயலாளர் பால சசிகுமார் தலைமை வகித்தார். இதில் துணை பொது செயலாளர் மல்லை சத்யா, தலைமை கழக செயலாளர் துரை வைகோ சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய பல்கலைக் கழகங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு என ஒதுக்கப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231 பதவிகளும், 620 இணை பேராசிரியர் பதவிகளில் 401 பதவிகளும், 1357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 பதவிகளும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.  இதுபோல, பழங்குடி பிரிவினருக்கான பதவி இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான பதவி இடங்களும் பெருமளவில் நிரப்பப்படாமல் உள்ளன.  சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, அவர்களுக்கு உரிய வாய்ப்பை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. …

The post மத்திய பல்கலைக் கழகங்களில் சமூகநீதி, இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்றி வேலைவாய்ப்பு வேண்டும்: மதிமுக தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : MDMK ,Chennai ,Madhyamik Student Union ,Student Union ,Madhyamik ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு சங்கங்கள் மூலம் டி.ஏ.பி.உரம் வழங்க துரை வைகோ எம்பி கோரிக்கை