×

மது விற்ற இருவர் கைது

 

சிவகாசி, மே 8: சிவகாசி அருகே நாரணாபுரம் ரோட்டில் கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்த அம்மன்கோவில்பட்டியை சேர்ந்த ஜெபர்சன் (19) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போன்று அந்த பகுதியில் தியேட்டர் அருகில் மது விற்பனை செய்ததாக லிங்கபுரம் காலனியை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் சின்னமுனியசாமி (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Eastern Police Department ,Naranapuram Road ,Jefferson ,Ammankovilpatti ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...