×

மதுரை வேளாண் கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வு கூட்டம்

 

மதுரை, ஏப். 28: மதுரை வேளாண் கல்லூரியில் தமிழ்நாடு – புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையங்களுக்கான தொழில்நுட்ப ஆய்வு கூட்டம் நடைபெற்றது. புனே வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் லக்கான்சிங், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வேளாண் விரிவாக்கத்துறை முன்னாள் துணை இயக்குநர் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேளாண் அறிவியல் நிலையங்களின் முக்கியத்துவம் குறித்தும், விவசாயிகளுக்கும், வேளாண் அறிவியல் நிலையங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.நிறைவு விழாவில் தேசிய அளவில் செயல்படுத்தபட்டு வரும் வேளாண் திட்டங்கள் குறித்து ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சக இணைச்செயலாளர் சாமுவேல் பிரவீன்குமார் விளக்கி பேசினார்.

The post மதுரை வேளாண் கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai Agricultural College ,Madurai ,Tamil Nadu-Puducherry Agricultural Science Institutes ,Lakhan Singh ,Pune Agricultural Technology Application Research Institute ,Indian Council of Agricultural Research… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...