×

மதுரை யாதவர் கல்லூரியில் 56ம் ஆண்டு விளையாட்டு விழா: மாணவ, மாணவிகளுக்கு பரிசு

மதுரை, ஏப். 17: மதுரை யாதவர் கல்லூரியில் 56ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.ராஜூ ஆண்டறிக்கை சமர்பித்தார். உடற்கல்வி இயக்குநர் முனைவர் எ.நெல்சன் எட்வர்டு ஞானஜோயல் விளையாட்டுத் துறைக்கான ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரிச் செயலாளர் இரா.வி.நா.கண்ணன் முன்னிலை வகித்தார். மதுரை மற்றும் சென்னை பார்க் பிளாசா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கேபிஎஸ்.கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். மதுரை சோலைமலை குழுமத்தின் தலைவர் வே.சோ.பா.சோலைமலை பிச்சை யாதவர் கல்லூரி 56ம் ஆண்டு பாரம்பரியம், இக்கல்லூரியில் படிப்பதால் கிடைக்கும் பெருமைகள் குறித்து பேசியதுடன், தேர்வுகளில் முதல் மதிப்பெண் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள்
அலுவலர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும், பல்கலைக்கழக விளையாட்டுக் குழுவில் இடம் பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டினார்.இந்நிகழ்வில் கல்லூரி தலைவர் சி.ஜெயராமன், துணைத்தலைவர் ப.செந்தில், இணைச் செயலாளர் ச.முத்துக்கிருஷ்ணன் என்ற கிட்டு, பொருளாளர் சி.கிருஷ்ணவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வெ.பாலகிருஷ்ணன், ரெ.கோபால், பா.சேகர், தி.ந.சுப்பையா, நா.ஆறுமுகம், ம.ரவீந்திரன், கோ.வேலுச்சாமி, வீ.ராஜூ, வா.முருகன், ஆ.பெ.இளங்கோ, க.ராஜ்குமார், ரா.ரங்கராஜன், தேர்வாணையர் முனைவர் மா.பாலசுப்பிரமணியன், கல்லூரி பாடத்திட்டம் குழுத் தலைவர் முனைவர் மெ.அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி உள்தர மதிப்பீட்டுக் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ.த.பரந்தாமன் வரவேற்றார். குழுசுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர் அ.ராஜகோபால் நன்றி கூறினார். விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறைப் பேராசிரியகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post மதுரை யாதவர் கல்லூரியில் 56ம் ஆண்டு விளையாட்டு விழா: மாணவ, மாணவிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : 56th Annual Sports Festival ,Madurai Yadav College ,Madurai ,56th Annual Sports Festival and ,Sports Festival ,Dr. ,S. Raju ,A. Nelson Edward Gnanajoyel ,Sports Department… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...