×

மதுரைக்கு ஜூன்1ல் வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு: திமுக ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்

 

திருப்புவனம், மே 30: திருப்புவனம் திமுக கிழக்கு ஒன்றிய ஊழியர் கூட்டம் மடப்புரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதி ஏனாதி ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் மூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அச்சங்குளம் முருகன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் பூவந்தி பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முனைவர் இளங்கோவன் வரவேற்று பேசினார்.

ஒன்றிய செயலாளர் கடம்பசாமி தீர்மானங்களை வாசித்தார். அதில் ஜூன் 3ல் தலைவர் கலைஞர் பிறந்த நாளில் வீடு தோறும் அவரின் போட்டோ வைத்து இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும். ஜூன் 1ம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு மதுரை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சிறப்பாக வரவேற்க அணி திரளவேண்டும். 2026 தேர்தலில் கிழக்கு ஒன்றியத்தில் அதிக வாக்குகளைப் பெற உழைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மடப்புரம் அப்பாச்சாமி, பூவந்தி ஆறுமுகம், மழவை கருணாநிதி, வேளாங்குளம் ராஜேந்திரன் உட்பட கிளைக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post மதுரைக்கு ஜூன்1ல் வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு: திமுக ஊழியர் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Madurai ,DMK ,Thiruppuvanam ,DMK East Union ,Madapuram ,Enathi Ramalingam ,Former ,Union Committee ,Vice President ,Murthy ,District Agriculture Team ,Vice President… ,Minister ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...