- பட்டிமன்ராம்
- அமைச்சர்கள்
- வேலு
- ராஜா கன்னாபன்
- திமுக
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை
- ஏ.வி.வேலு
- ராஜகன்னப்பன் அகியியர்
- ஏ வி. வேலு
- தின மலர்
திருவண்ணாமலை, டிச.30: திருவண்ணாமலையில் திமுக பொறியாளர் அணி சார்பில் மண்டல அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் பட்டிமன்றம் இன்று நடக்கிறது. அதில், அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜகண்ணப்பன் ஆகிேயார் பங்கேற்கின்றனர். திமுக பொறியாளர் அணி சார்பில் மண்டல அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் பட்டிமன்றம், திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு நடக்கிறது.
அதில், தமிழ் சமூகத்தின் மீதான கலைஞரின் அன்பு, பெரியார், அண்ணா வழியில் கலைஞரின் சாதனைகள், கலைஞரால் தலைநிமிர்ந்த தமிழகம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. அதில், கார்த்திக்ராஜா, நாராயண கோவிந்தன், பிரிட்டோ ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்கின்றனர்.
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, சேலம் வடக்கு, தெற்கு, மத்தியம், கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு, விழுப்புரம் வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். அதேபோல், பகல் 2 மணியளவில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி உள்அரங்கத்தில், திமுகபொறியாளர் அணி சார்பில், கலைஞரின் சமூக நலத் திட்டங்களால் அதிகம் பயனடைந்தவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
பேராசிரியர் கு.ஞானசம்மந்தம் நடுவராக பொறுப்பேற்கிறார். ஆண்களே என்ற தலைப்பில் பேராசிரியர் மகாசந்தர், நாஞ்சில் நவரசசெல்லகண்ணன் ஆகிேயாரும், பெண்களே என்ற தலைப்பில் முனைவர் ம.எழிலரசி, பேராசிரியை முத்துலெட்சுமி ஆகியோரும் வாதிடுகின்றனர். அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அருணை பொறியியல் கல்லூரி உள்அரங்கத்தில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலை வகிக்கிறார். மாநில பொறியாளர் அணி செயலாளர் எஸ்.கே.பி. கருணா வரவேற்கிறார்.
விழாவிற்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையேற்று பேசுகிறார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பரிசுகள் வழங்கி பேசுகிறார்.
விழாவில், மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால், வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என்.அண்ணாதுரை, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன்.முத்து, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி, மாவட்டபொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணைசெயலாளர்கள் பிரியா ப.விஜயரங்கன், விஜயலட்சுமிரமேஷ், நகரசெயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சி.ராம்காந்த் நன்றி கூறுகிறார்.
The post மண்டல அளவிலான பேச்சுப்போட்டி பட்டிமன்றம் அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜகண்ணப்பன் பங்கேற்பு திமுக பொறியாளர் அணி சார்பில் இன்று appeared first on Dinakaran.