- மணல்கேணி
- மதுரை
- எல்.கே.பி. நகர் அரசு நடுநிலைப்பள்ளி
- கிழக்கு
- பஞ்சாயத்து யூனியன்
- மதுரை மாவட்டம்
- தென்னவன் மணல்கேணி
- தின மலர்
மதுரை, பிப். 19: மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் எல்.கே.பி.நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வீடியோ வடிவில் படிப்பதற்காக மணற்கேணி செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலியை பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தி பள்ளி தலைமையாசிரியர் தென்னவன் மணற்கேணி செயலில் உள்ள பாடப்புத்தகங்களை மாணவர்கள் எவ்வாறு பார்வையிட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பெற்றோர்கள் செயலியை கீயூ ஆர்கோடு மூலம் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்வது எப்படி எனவும். அதில் உள்ள பாடங்கள், உயர்கல்வி வழிகாட்டி, நம்பிக்கை மனிதர்களின் கதைகள் மற்றும் வீடியோக்கள் ஸ்மார்ட்போர்டு மூலம் பெற்றோர்களுக்கு திரையிட்டு காண்பித்து செயலி குறித்த அனைத்து சந்தேகங்களையும் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. பள்ளி மேலாண்மைகுழு தலைவர் தஸ்லீம் நன்றி கூறினார்.
The post மணற்கேணி செயலி விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.
