×

மக்கள் குறைதீர் கூட்டம் 300 மனுக்கள் பெறப்பட்டன

 

திண்டுக்கல், மே 27: திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு டிஆர்ஓ ஜெயபாரதி தலை மை வகித்து, பொதுமக்களிடமிருந்து 300 மனுக்கள் பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post மக்கள் குறைதீர் கூட்டம் 300 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Tags : People's Grievance Redressal Meeting ,Dindigul ,People's Grievance Redressal Day ,DRO Jayabharathi ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...