மும்பை : மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நலசோப்ரா பகுதியில் உள்ள விநாயகா என்கிற தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த உயிரிழந்தோரின் உறவினர்கள் மருத்துவமனைகளுக்குள் புகுந்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், வயது மூப்பு மற்றும் இணை நோய்கள் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வாசி-விரார் மாநகராட்சியில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், போதிய எண்ணிக்கையில் அவற்றை வழங்குமாறும் மாநில அரசை கேட்டு மேயர் ராஜீவ் பட்டேல் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது….
The post மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் 7 பேர் பலி!! appeared first on Dinakaran.