×

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருதுகள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

நாகர்கோவில், ஏப்.17 : குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் வட்டார அளவிலான கூட்டமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள், நகர்புறங்களில் உள்ள நகர அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், மகளிர் திட்டத்தில் இணைந்த தகுதியான சுய உதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரகம், நகர்புற வாழ்வாதார இயக்க அலகில் ஏப்ரல் 15 முதல் 30ம் தேதிக்குள் நேரில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருதுகள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Collector ,Manimekalai Awards ,Nagercoil ,Kumari District ,Azhugumeena ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...