×

போலீசார் டிரைவர்கள் இடையே வாக்குவாதம்

 

மதுரை, ஏப். 28: மதுரை, மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கும் அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களை சரியான நடைமேடையில் நிறுத்தாமல் வழியில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்ஙகளை அகற்றும்படி கூறியதால், போலீசாருக்கும், அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

The post போலீசார் டிரைவர்கள் இடையே வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Mattutthavani ,Nellai ,Kanyakumari ,Thoothukudi ,Ramanathapuram ,Chennai ,Bangalore ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...