- கிரிஸ்துவர்
- தென் கள்ளிகுளம்
- பாப்பரசர்
- வள்ளியூரில்
- நெல்லை மாவட்டம்
- அதிசய பனிமதா தேவாலயம்
- தாடியஸ் ராஜன்...
வள்ளியூர், ஏப்.25: போப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தெற்கு கள்ளிகுளத்தில் கிறிஸ்தவர்களின் மவுன ஊர்வலம் நடந்தது. நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் போப் ஆண்டவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதிசய பனிமாதா ஆலயத்தின் முன்பு பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி போப் பிரான்சிஸ்சின் திருவுருவப்படத்தை தோளில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக மவுன ஊர்வலமாக சென்றனர். பின்னர் பனி மாதா ஆலயத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு ஆலயத்தின் துக்க மணி ஒலிக்க கிறிஸ்தவ கொடி கீழே இறக்கப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதையடுத்து போப் திருவுருவப்படத்திற்கு ஏராளமானோர் மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர். சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தை தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க தர்மகர்த்தா ஆசிரியர் மரியராஜ் அவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
The post போப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தெற்கு கள்ளிகுளத்தில் கிறிஸ்தவர்கள் மவுன ஊர்வலம் appeared first on Dinakaran.
