×

போதை ஒழிப்பு விழிப்புணர்வு

 

போடி, ஜூலை 8: போடி அருகே கொட்டக்குடி குரங்கணியில் தனியார் அமைப்பு சார்பில் மது போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் எடுத்து கூறப்பட்டது. கலைக்குழுவினர் நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மதுவினால் ஏற்படும் உடல் ரீதி யான பாதிப்புகள், பொருளாதார இழப்புகள், சமுதாயப் பிரச்னைகள், நடத்தை ரீதியான வன்முறை நிகழ்வுகள் போன்றவை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.இக்கிராமத்தில் மதுவுக்கு அடி மையாகும் இ ளைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது. முகாமின் முடிவில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மது ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

The post போதை ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Kottakudi Kurangani ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...