- பொறியாளர் சங்கம்
- முதல் அமைச்சர்
- விருதுநகர்
- நெடுஞ்சாலைத் துறை பட்டயப் பொறியாளர்கள் சங்கம்
- மாரிமுத்து
- மாநில பொதுச் செயலாளர்
- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பட்டயப் பொறியாளர்கள் சங்கம்
- தமிழ்நாடு சட்டமன்றம்
விருதுநகர், ஏப்.29: நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து இந்த ஆண்டே பணம் பெறும் உத்தரவு, மகப்பேறு விடுப்பு ஓராண்டாக அதிகரிப்பு, கல்விக்கடன் தொகை அதிகரிப்பு, திருமண கடன் தொகை, பண்டிகை கால முன் பணம் அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த தமிழக முதல்வருக்கு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
The post பொறியாளர் சங்கம் முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.
