×

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

வில்லிபுத்தூர், நவ. 28: வில்லிபுத்தூர் நகரில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வில்லிபுத்தூர் நகராட்சி கமிஷனர் பிச்சைமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திடக்கழிவு மேலாண்மை விதி 2016ன் படி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் படி, வில்லிபுத்தூர் நகரில் 33 வார்டுகளில், பொது இடங்களில் குப்பைகளை கொட்டுதல், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பொது இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டினாலோ, மலம் மற்றும் சிறுநீர் கழித்தாலோ ரூ.1000 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Municipal administration ,Williputhur ,Municipal Commissioner ,Pichaimani ,
× RELATED தெனாலியை விட பழனிசாமியின் பயப்...