×

தெனாலியை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது பாஜவுக்கு அச்சப்படும் ‘கோழை பழனிசாமி’: அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

சென்னை: தெனாலியின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது என்றும், பாஜவுக்கு அச்சப்படும் கோழை பழனிசாமி என்றும் அமைச்சர் கே.என்.நேரு காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கை: பாஜவோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கொரு முறை நிரூ.பித்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ’கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ என்றும் சொல்லி ’கோழைசாமி’ பாஜ பாசத்தை
வெளிப்படுத்தியிருக்கிறார்.

பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத் துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித் துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய்விடுமோ என்று பயம். இப்படி பழனிசாமியின் பயப் பட்டியலும் எல்லாம் பயம் மயம் எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது. ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்குப் பயந்து ஆதரவு. முத்தலாக் தடை சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என அதிமுக இரட்டை வேடம் போட்டது. முஸ்லிம்களை அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை 2024ல் மாநிலங்களவையில் கொண்டு வர ஆதரித்துக் கையெழுத்திட மறுத்தது.

நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதங்களுக்கு மாற்ற முடியாது எனும் மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக பாஜ நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், கருத்து தெரிவிக்காமல் அதிமுக பதுங்கியது. நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டே மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை பலமாக ஆதரித்தது மட்டுமின்றி அவற்றை எதிர்த்தவர்களையும் கடுமையாக விமர்சித்தவர் பழனிசாமி.
மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பாஜவின் உன்னத தோழன் அதிமுக.

இப்படி மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழைதான் பழனிசாமி. இந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமிதான் அதிமுக பொதுக்குழுவில் வீராவேசமாகப் பேசுவது போல், காற்றோடு கத்தி சண்டை போடுகிறார். “அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026ல் அதிமுக மீண்டும் அரியணை ஏறும்” என்றெல்லாம் பொதுக்குழுவில் ஆக்ரோஷமாகப் பேசியிருக்கிறார். கோழைக்கு ஆசை என்ன என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழைதான் பழனிசாமி.

The post தெனாலியை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது பாஜவுக்கு அச்சப்படும் ‘கோழை பழனிசாமி’: அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Bajaj ,Tenali ,Minister ,K. N. Nehru ,Chennai ,Minister of Municipal Administration ,Bajawad ,Palanisami ,Kozhai Palanisami ,
× RELATED பாஜ தலைவர் அண்ணாமலையுடன் நடிகை...