×

பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு; குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பொது மருத்துவம், கண் சிகிச்சை முகாம்

குத்தாலம், ஜுன். 25: குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அவரது குடும்பத்தார்களுக்கு பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் கும்பகோணம் மெட்வே மருத்துவமனை, மேக்ஸ் விஷன் ஐ ஹாஸ்பிடல் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து நேற்று குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் முகாம் நடைபெற்றது .

முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதாமாரியப்பன் மற்றும் செயல் அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் பணியாளர்களுக்கான கண் சிகிச்சை முகாமை துவங்கி வைத்தனர். முகாமிற்கு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முகாமில் குத்தாலம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் இதில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயனடைந்து சலுகை விலையில் முகக் கண்ணாடி பெற்றுக் கொண்டனர். முடிவில் முகாமை நடத்தித் தந்த மெட்வே மருத்துவமனை மற்றும் மேக்ஸ் விஷன் மருத்துவமனைக்கும் பேரூராட்சி பேரூராட்சி உதவியாளர் சுந்தர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

The post பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு; குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பொது மருத்துவம், கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Kutthalam Town Panchayat ,Kutthalam ,Mayiladuthurai district ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...