கோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை காந்தையாற்றில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் மலைகிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பவானி அணையின் நீர்மட்டம் 96 அடியை எட்டியதையடுத்து காந்தையாற்றில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் 20 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை தாண்டி ஆற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாலம் முழுவதும் மூழ்கும் பட்சத்தில் காந்தவயல் பகுதியில் உள்ள நான்கு மலை கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அரசு உரிய கவணம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 96 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 3,866 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனையடுத்து காந்தவயல் செல்லும் பாலத்தை கடக்கவோ, நீர்தேக்கங்களில் குளிக்கவோ வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
