×

பேராவூரணி அருகே இலவச கண் பரிசோதனை முகாம்

 

பேராவூரணி, மே 5: பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், 760 கண் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். 104 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சுவாமி விவேகானந்தா சேவா கேந்திர பொறுப்பாளர்கள் சக்கரவர்த்திசெந்தில்குமார், சேதுராமன், சுந்தர்ராஜன், லோகேஸ்வரன், செல்வராசு, பாலமுருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post பேராவூரணி அருகே இலவச கண் பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Tags : Peravoorani ,Tiruchittambalam ,Swami Vivekananda Seva Kendram ,Madurai Aravind Eye Hospital ,District Vision Loss Prevention Association ,Madurai… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...