×

பெருங்குளத்தில் சார் பதிவாளர் ஆபீசிற்கு அடிக்கல் நாட்டு விழா ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, பணிகளை தொடங்கி வைத்தார்

ஏரல், ஜூன் 6: பெருங்குளத்தில் மூலதன மானிய திட்ட நிதி ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். ஏரல் தாசில்தார் செல்வக்குமார், சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், பொதுச்செயலாளர் பிச்சையா, ஊடகப்பிரிவு முத்துமணி, வட்டார தலைவர்கள் தாசன், ஜெயராஜ், நல்லகண்ணு, சொரிமுத்து பிரதாபன், ஜெயசீலன் துரை, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், திமுக நகர செயலாளர்கள் ராயப்பன், நவநீத முத்துக்குமார், சிவகளை விவசாய சங்க தலைவர் மதிவாணன், காங்கிரஸ் மாணவரணி தலைவர் சாம், சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் பிரவீணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெருங்குளத்தில் சார் பதிவாளர் ஆபீசிற்கு அடிக்கல் நாட்டு விழா ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, பணிகளை தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : stone ,Sub ,Registrar's Office ,Perungulam ,Urvashi Amritraj ,MLA ,Sub-Registrar's Office ,Vaikundam ,Foundation stone ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...