×

பெரியதாழையில் ரூ.62 லட்சத்தில் குடிநீர் விரிவாக்கப் பணி, நீர்தேக்கதொட்டிக்கு அடிக்கல்

சாத்தான்குளம், ஜூன் 23: பெரியதாழையில் ரூ.62 லட்சத்தில் குடிநீர் விரிவாக்கப்பணி மற்றும் தரைநிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
சாத்தான்குளம் ஒன்றியம் பெரியதாழையில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.50.60 லட்சத்தில் குடிநீர் வசதிக்காக வைரவன்தருவைகுளத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பைப் லைன் விரிவாக்கம் செய்யும் பணி தொடக்க விழா, மாவட்ட ஊராட்சி நிதி ரூ.12 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தரைநிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து இரு திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் ஒன்றிய ஆணையாளர் ராஜா ஆறுமுகநயினார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இஸ்மாயில், பெரியதாழை பங்குதந்தை சுசீலன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், மாவட்ட மீனவரணி தலைவர் சுரேஷ், வட்டாரத் தலைவர்கள் பார்த்தசாரதி, பிரபு, பேரூராட்சி கவுன்சிலர் லிங்கபாண்டி, மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் ராஜேஷ் நன்றி கூறினார்.

The post பெரியதாழையில் ரூ.62 லட்சத்தில் குடிநீர் விரிவாக்கப் பணி, நீர்தேக்கதொட்டிக்கு அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Peryatollah ,Satankulam ,Urvasi ,Amritraj MLA ,Beryadala ,Satankulam Union Peryatollah District Authority ,Vairavantharuvaikulam ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...