×

பெரம்பலூர் /அரியலூர் ஜெயங்கொண்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு

 

ஜெயங்கொண்டம், நவ.6: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின்படியும், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சீராளன் அறிவுரையின்படியும், ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் ஜெயங்கொண்டம் தனியார் (பெரியார்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள்,சாலை பாதுகாப்பு, தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு, போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகள், விபத்துகள் அதனால் ஏற்படும் உயிர்பலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் பேருந்தில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது. பல்வேறு நிலைகளில் மாணவர்கள் படியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர் அதனால் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட வயதிற்கு மேல் உரிமம் பெற்று இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியின் போது ஜெயங்கொண்டம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கொளஞ்சி, காவலர்கள், மற்றும் ஆசிரியர்கள் உடன் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் /அரியலூர் ஜெயங்கொண்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Aryalur Jayangondai Jayangondam ,Ariyalur District Police ,Superintendent ,Selvaraj ,Jayangondam Indgota Police ,Jayangondam City Traffic Police ,Jayankondam Private (Periyar) Secondary School ,Jaivanan ,Aryalur Jayangondal ,Dinakaran ,
× RELATED தரச் சான்றிதழுக்கான தகுதிகள்...