×

பெரம்பலூரில் சமுதாய வளைகாப்பு விழா பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் காலிப்பணியிடம் நிரப்ப முதற்கட்ட நேர்முகத் தேர்வு இன்று ேநரில் வர அழைப்பு

பெரம்பலூர்,செப்.29: ‘‘பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸில் காலிப்பணியிடங்களை நிரப்ப முதற்கட்ட நேர்முகத் தேர்வு இன்று செப்.29ம்தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை அரசுத் தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளது. தகுதியானோர் நேரில் வந்து கொள்ளலாம்,’’ என்று மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கு உண்டான முதற்கட்ட நேர் முகத்தேர்வு இன்று (செப்.29)ம்தேதி காலை 9 மணி முதல் பகல்1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் மருத்துவ உதவியாளருக்குத் தேவையான கல்வி மற்றும் தகுதிகள், நேர்முகத் தேர்வுக்கு வருபவர்களின் வயது, 19 வயதுக்கு மேலும் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதியானது பி.எஸ்.சி., நர்சிங், GNM, DMLT,ANM (12ம் வகுப்பு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ் படிப்புகளான பி.எஸ்.சி., ஜூவாலஜி, பி.எஸ்.சி., தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னானலஜி, மைக்ரோ பயாலஜி இவைகளில் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறையானது முதலில் எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த அடிப்படை முதலுதவி, செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக மனிதவள மேம்பாட்டுத் துறையின் நேர்முகதேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்கள் மாத ஊதியமாக ரூ 15,435 பெறுவர்.

ஓட்டுநர் பணிக்கு உண்டான தகுதிகள்:
கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 24 வயதிற்கு மேலும் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் தொடர்பான தகுதிகள் இலகு ரக வாகன உரிமம் எடுத்து, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முழுமை பெற்றிருக்க வேண்டும். தேர்வுமுறையானது முதல் கட்டமாக எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனித வள நேர்காணல், சாலை விதிகள் சம்பந்தமான தேர்வு, கண்பார்வை திறன் சோதிக்கும் தேர்வு ஆகும். இந்தத் தேர்வுகள் அனைத்திலும் வெற்றி பெற்றவர்கள் மாதச் சம்பளம் ஆக மொத்தம் ரூபாய் 15,235 பெறுவர்.

அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற்றவர்கள் 12 மணி நேர இரவு மற்றும் பகல் ஷிப்ட் முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தங்களது கல்வித் தகுதி, ஓட்டுனர் உரிமம், முகவரி சான்று, அடையாளச் சான்று ஆகியவைகளின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 9154251363 , 9154251362 என்ற எண்ணிற்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூரில் சமுதாய வளைகாப்பு விழா பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் காலிப்பணியிடம் நிரப்ப முதற்கட்ட நேர்முகத் தேர்வு இன்று ேநரில் வர அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Shower ,Perambalur District 108 ,Perambalur District ,Perambalur ,108 ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விதிகளை...