×

படியுங்கள் எறையூரில் 10 அடிநீள மலைப்பாம்பு பிடிபட்டது

பெரம்பலூர், அக்.1: பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் 10அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, எறையூர் நரி ஓடையை அடுத்த காந்திநகர் பகுதியில் நேற்று முன் தினம் (29ஆம்தேதி) இரவு 9மணியளவில் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று செல்வதைப் பார்த்த சிலர் ஒன்று கூடி, அது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சென்று விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட பெரம்பலூர் சரக வனத் துறையினருக் கும், வேப்பூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவல்களின் பேரில் அங்கு விரைந்து சென்ற வேப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் 10அடி நீளமுள்ள மலைப் பாம்பினை லாவகமாக பிடித்து ஒரு சாக்கு பையில் போட்டு வைத்தனர். பின்னர் அங்கு வந்து சேர்ந்த பெரம்பலூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட வனக் காப்பாளர்களிடம் ஒப்ப டைத்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை யினர் அந்த மலைப் பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்று அடர்ந்த வனப் பகுதியில் விட்டுவிட்டனர்.

The post படியுங்கள் எறையூரில் 10 அடிநீள மலைப்பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR ,OCT ,ERAIUR, PERAMBALUR DISTRICT ,Gandhinagar ,Fox Stream ,Perambalur district ,Veppanthata Taluka ,Eryur Fox Stream ,Eryur ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு