- திருவாரூர்
- கலெக்டர்
- சாருஸ்ரீ
- திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை
- சமூக நலன்புரி மற்றும் பெண்கள் உரிமைகள் திணைக்களம்
திருவாரூர், ஜூலை 24: திருவாரூர் மாவட்ட சமூகநலத்துறை சார்பில் இலவச எம்பிராய்டரி தையல் இயந்திரங்கள் பெறுவதற்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் எம்பிராய்டரி தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கு திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் 20 முதல் 40 வயது வரை உடைய மகளிர்கள், வட்டாட்சியரிடமிருந்து பெற்ற குடும்ப ஆண்டு வருமானம் சான்று ரூ.72 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். வயதுக்கான பள்ளி சான்று, எம்பிராய்டரி தையல் பயிற்சி பெற்ற சான்று, முன்னுரிமை பெறுவதற்கு, விதவைச்சான்று (அல்லது) ஆதரவற்றோர் சான்று (அல்லது) கணவரால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்று ஆகியவைகளுடன் வரும் 31ம் தேதிக்குள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
The post பெண்கள், விதவைகள், ஆதரவற்றோருக்கு இலவச எம்பிராய்டரி தையல் இயந்திரம் appeared first on Dinakaran.